Welcome to Jettamil

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தி

Share

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலும் உள்ள இந்துப் பெருமக்கள் மிகுந்த பக்தியுடன் இன்று மகா சிவராத்திரி தினத்தைக் கொண்டாடுகின்றனர். இந்த புனித நாளை முன்னிட்டு இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது:

‘இருள் நீங்கி ஞான ஒளி பிரகாசிக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் சிவபெருமானை வழிபடும் உன்னதமான நாளாக இது அமைகின்றது. சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் சங்கமத்தையும், இறைவனின் தெய்வீக தாண்டவத்தையும் நினைவுகூரும் இந்நாள், வாழ்க்கையின் இருளை வெல்வதைக் குறிப்பதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஒழுக்கநெறியுள்ள மற்றும் கருணையுள்ள சமூகத்தை உருவாக்குவதில் இத்தகைய மத மற்றும் கலாசார நிகழ்வுகள் மிக முக்கியமானவை என்று தான் உறுதியாக நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார். அகங்காரத்தை விடுத்து, நேர்மை, தாராள மனப்பான்மை மற்றும் மன்னிப்பு போன்ற உயர் பண்புகளுடன் வாழ மகா சிவராத்திரி சடங்குகள் நம்மை நெறிப்படுத்துகின்றன.

அண்மைக் காலத்தில் நாம் எதிர்கொண்ட மிக மோசமான இயற்கை பேரழிவுகளுக்குப் பின்னர், அரசியல், பொருளாதார மற்றும் சமூக மாற்றங்களுடன் ஒரு புதிய மறுமலர்ச்சியின் சகாப்தத்தை நோக்கி நாம் இப்போது பயணிக்கிறோம். மகா சிவராத்திரி இரவில் ஏற்றப்படும் விளக்குகளின் ஒளியுடன் நம் இதயங்களை ஒன்றிணைத்து, தேசத்தைக் கட்டியெழுப்பும் இந்தப் பாதையில் அனைவரும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களின் நல் எண்ணங்கள் நிறைவேறும் ஒரு அர்த்தமுள்ள சிவராத்திரி தினமாக இது அமையட்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.’

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை