மத்திய கிழக்கு போரில் இலங்கை எந்தத் தரப்பிற்கும் ஆதரவளிக்காது – அமைச்சர் விஜித ஹேரத் அறிவிப்பு!
மத்திய கிழக்கில் தற்போது ஏற்பட்டுள்ள யுத்தத்தில் இலங்கை எந்தவொரு தரப்பிற்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (19) நடைபெற்ற மத்திய கிழக்குப் போர் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் திட்டவட்டமாக அறிவித்தார்.
சர்வதேச ரீதியில் நிலவும் இந்தப் போர்ச் சூழலால் இலங்கையின் பொருளாதாரம் மற்றும் எரிசக்தித் துறையில் ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர், இலங்கை எப்போதும் அமைதி வழியிலான தீர்வுகளையே விரும்புவதாகவும், எந்தவொரு இராணுவத் தரப்பிற்கும் ஆதரவாகச் செயற்படாது என்றும் வலியுறுத்தினார்.





