Welcome to Jettamil

புதன்கிழமை விடுமுறையை திங்கட்கிழமைக்கு மாற்றுக! : ரவூப் ஹக்கீம் எம்.பி. கோரிக்கை

Share

புதன்கிழமை விடுமுறையை திங்கட்கிழமைக்கு மாற்றுக! : ரவூப் ஹக்கீம் எம்.பி. கோரிக்கை

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலை காரணமாக அரசாங்கத்தினால் வாரம்தோறும் புதன்கிழமை அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறை தினத்தால் நாடாளுமன்ற அமர்வுகள் மற்றும் தூரப் பிரதேசங்களிலிருந்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் செவ்வாய் முதல் வெள்ளி வரை கூடும் நிலையில், இடைநடுவே வரும் புதன்கிழமை விடுமுறை தேவையற்ற சிக்கல்களை உருவாக்குவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, இந்த விடுமுறையை திங்கட்கிழமைக்கு மாற்றுவதன் மூலம் நாடாளுமன்றம் தொடர்ந்து நான்கு நாட்களும் தடையின்றி இயங்க முடியும் என அவர் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

மக்கள் எதிர்நோக்கும் அதிகப்படியான பிரச்சினைகள் குறித்துச் சபையில் விவாதிக்க வேண்டியுள்ளதால், நாடாளுமன்ற நேரத்தை வீணடிக்கக் கூடாது என ரவூப் ஹக்கீம் வலியுறுத்தினார்.

இது தொடர்பாகச் சபை முதல்வரிடம் கேட்டபோது அவர் ஜனாதிபதியிடம் கோருமாறு கூறியதாகவும், ஆனால் நாடாளுமன்ற விடயங்களைச் சபாநாயகரே தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை