Welcome to Jettamil

ஈரானின் அனைத்தையும் அழித்துவிட்டீர்கள் என்கிறீர்கள்- பின்னர் எதற்குப் பேச்சுவார்த்தை? – டிரம்ப் ஐ கிண்டலடிக்கும் ஈரான்

Share

ஈரானின் அனைத்தையும் அழித்துவிட்டீர்கள் என்கிறீர்கள்- பின்னர் எதற்குப் பேச்சுவார்த்தை? – டிரம்ப் ஐ கிண்டலடிக்கும் ஈரான்

ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் தற்காப்புத் திறன்கள் அனைத்தும் சிதைக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்கா கூறிவரும் நிலையில், ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி அதற்கு ஆக்ரோஷமான பதிலடியை வழங்கியுள்ளார்.

“எமது பலம் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டதாக நீங்கள் கூறுவது உண்மையானால், பிறகு எதைப் பற்றிப் பேசுவதற்கு எம்மை அழைக்கிறீர்கள்?” என அவர் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். அமெரிக்காவின் சமாதான அழைப்பு என்பது ஈரானைப் பலவீனமாகக் காட்டும் ஒரு முயற்சி என அவர் சாடியுள்ளார்.

ஈரான் ஒருபோதும் போர் நிறுத்தத்தையோ அல்லது பேச்சுவார்த்தையையோ கோரவில்லை என்றும், தற்காப்புத் தாக்குதல்களைத் தொடரத் தயாராக இருப்பதாகவும் ஈரானிய அதிகாரிகள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் தங்களுக்கு கசப்பான அனுபவங்களே மிஞ்சியுள்ளதாகக் குறிப்பிட்ட அரக்ச்சி, தற்போது எவ்விதப் பேச்சுவார்த்தை மேசையும் தங்களுக்கு முன்னால் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஈரான் சரணாகதி நிலைக்கு வந்துவிட்டது என்ற பிம்பத்தை உலக நாடுகளுக்கு மத்தியில் உருவாக்க டொனால்ட் ட்ரம்ப் முயற்சிப்பதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

அதேநேரம், ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்கள் இப்போதும் வலுவாகவே இருப்பதாகவும், எந்தவொரு சட்டவிரோதப் போருக்கும் ஈரானிய மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை