ஈரானியத் தூதுவருடன் மைத்திரிபால சிறிசேன சந்திப்பு! மத்திய கிழக்குப் போர் குறித்துத் தீவிர ஆலோசனை
இலங்கைக்கான ஈரான் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh) மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையிலான முக்கிய சந்திப்பொன்று நேற்று (25.03.2026) கொழும்பிலுள்ள ஈரான் தூதரகத்தில் நடைபெற்றது.
இதன்போது, மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் மிக மோசமான போர்ச் சூழல் மற்றும் அதன் உலகளாவிய பாதிப்புகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடினர்.





