சைரன் ஒலிகளைச் சாதகமாகப் பயன்படுத்தி ஹோட்டலில் பணம் செலுத்தாமல் ஓடும் இஸ்ரேலியர்கள்
ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை முன்னெடுக்கும் போது, இஸ்ரேலிய நகரங்களில் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை சைரன் ஒலிகள் எழுப்பப்படுகின்றன.
இந்தச் சந்தர்ப்பத்தில் மக்கள் பாதுகாப்புத் தேடி பதுங்கு குழிகளை நோக்கி ஓடும் பதற்றமான சூழலைச் சில நபர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
உணவகங்கள் மற்றும் வணிக வளாகங்களில் காத்திருக்கும் இவர்கள், சைரன் ஒலித்தவுடன் மற்றவர்களோடு சேர்ந்து ஓடுவது போல நடித்து, தாங்கள் உண்ட உணவு அல்லது வாங்கிய பொருட்களுக்கான கட்டணத்தைச் செலுத்தாமல் அங்கிருந்து தப்பிச் செல்கின்றனர்.
இஸ்ரேலிய ஊடகமான ‘Channel 13’ வெளியிட்டுள்ள செய்தியின் படி, இத்தகைய சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் பயத்தில் மக்கள் உயிருக்கு அஞ்சி ஓடும் வேளையில், அதனைப் பணத்தை மிச்சப்படுத்தும் ஒரு வாய்ப்பாகப் பார்க்கும் இத்தகைய தரம் குறைந்த செயல்கள் இஸ்ரேலியச் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இதனால் பல உணவக உரிமையாளர்கள் பெரும் பொருளாதார நட்டத்தைச் சந்தித்து வருகின்றனர்.





