Welcome to Jettamil

அமெரிக்க டொலரில் டொனால்ட் ட்ரம்ப்பின் கையொப்பம்! 165 வருட வரலாற்றை மாற்றிய அதிரடி உத்தரவு

trump sign new dollar

Share

அமெரிக்க டொலரில் டொனால்ட் ட்ரம்ப்பின் கையொப்பம்! 165 வருட வரலாற்றை மாற்றிய அதிரடி உத்தரவு

அமெரிக்காவின் நாணயத்தாள்களில் இனி ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கையொப்பம் இடம்பெறும் என அமெரிக்கத் திறைசேரி (U.S. Treasury) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதன் மூலம் கடந்த 165 ஆண்டுகளாகப் பின்பற்றி வந்த பாரம்பரியம் ஒன்று முடிவுக்கு வந்துள்ளது. பொதுவாக அமெரிக்க டொலர்களில் திறைசேரி செயலாளர் மற்றும் அமெரிக்கப் பொருளாளர் ஆகியோரின் கையொப்பங்கள் மட்டுமே இடம்பெறுவது வழக்கம்.

ஆனால், ஒரு ஜனாதிபதி தனது கையொப்பத்தை நாணயத்தாள்களில் இடுவது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

முதற்கட்டமாகப் புதிய 20 டொலர் மற்றும் 100 டொலர் நாணயத்தாள்களில் இந்த மாற்றம் அமல்படுத்தப்படவுள்ளது. ஈரான் உடனான போர் (Operation Epic Fury) மற்றும் சர்வதேசப் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், அமெரிக்கப் பொருளாதாரம் தனது நிர்வாகத்தின் கீழ் வலிமையாக இருப்பதை உலகிற்குப் பறைசாற்றவே ட்ரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

படிப்படியாக மற்ற அனைத்துப் பணத்தாள்களிலும் ஜனாதிபதியின் கையொப்பம் அச்சிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை