உத்தரவுக்காகக் காத்திருக்க வேண்டாம்; அமெரிக்க தரை படை எதிரிகளை அந்த இடத்திலேயே முடியுங்கள்! – உச்சத்தலைவர் மொஜ்தபா கமேனி கட்டளை
அமெரிக்கா ஒருவேளை ஈரானுக்குள் தரைவழித் தாக்குதலைத் தொடங்கினால், அதனை எதிர்கொள்ள ஈரானியப் படைகள் தலைமையின் நேரடி உத்தரவுக்காகக் காத்திருக்கத் தேவையில்லை எனப் புதிய உச்சத்தலைவர் மொஜ்தபா கமேனி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஈரானின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையைப் பாதுகாக்கும் பொருட்டு, எல்லையைத் தாண்டி வரும் எதிரிகளை அந்தந்த இடத்திலேயே தன்னிச்சையாகத் தாக்கி அழிக்கும் அதிகாரம் இராணுவத் தளபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
“எதிரிகள் எமது மண்ணைத் தொடும் அந்த நிமிடமே அவர்களின் அழிவு தொடங்க வேண்டும்” என மொஜ்தபா கமேனி தனது இராணுவத் தளபதிகளுக்குக் கட்டளையிட்டுள்ளார்.





