Welcome to Jettamil

கூகுள், ஆப்பிள் நிறுவனங்களுக்கு ஈரானின் மரண எச்சரிக்கை! புதிய வேட்டை ஆரம்பம்

Share

கூகுள், ஆப்பிள் நிறுவனங்களுக்கு ஈரானின் மரண எச்சரிக்கை! புதிய வேட்டை ஆரம்பம்

இராணுவத் தளங்களை விடுத்து, துபாய் மற்றும் இஸ்ரேலில் இயங்கி வரும் கூகுள், ஆப்பிள், டெஸ்லா உள்ளிட்ட 18 பிரம்மாண்டமான அமெரிக்கக் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது நேரடித் தாக்குதல் நடத்தப் போவதாக ஈரானியப் புரட்சிகரக் காவற்படை (IRGC) பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏப்ரல் 1 ஆம் திகதி இரவு 8 மணி முதல் இந்த அழிவு நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், வால் ஸ்ட்ரீட் பங்குச்சந்தை வட்டாரங்கள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வௌியிட்டுள்ள இந்தத் தகவலால், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள ஐடி (IT) ஊழியர்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனப் பணியாளர்கள் மத்தியில் உச்சக்கட்டப் பீதி ஏற்பட்டுள்ளது.

பங்குச்சந்தைகளை அதலபாதாளத்திற்குத் தள்ளி, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பைப் பணிய வைப்பதே ஈரானின் இந்த மாஸ்டர் பிளான் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பொருளாதார ரீதியாக அமெரிக்காவை முடக்குவதே ஈரானின் இந்த புதிய போர்த் தந்திரமாகும்.

வளைகுடா நாடுகளில் குறிப்பாகத் துபாயில் உள்ள பல்லாயிரக்கணக்கான இந்திய மற்றும் இலங்கை ஊழியர்கள் இந்த நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.

ஈரானின் இந்த நேரடி எச்சரிக்கையால் அவர்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. போர் முனையில் இருந்து பொருளாதார முனைக்குத் திரும்பியுள்ள இந்த மோதல், உலகப் பொருளாதாரத்தில் பாரிய சரிவை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

ஈரான் தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ள தாக்குதலுக்குள்ளாக வாய்ப்புள்ள முக்கிய அமெரிக்க நிறுவனங்களின் பட்டியல் பின்வருமாறு:

Cisco, HP, Intel, Oracle, Microsoft, Apple, Google, Meta, IBM, Dell, Palantir, Nvidia, JP Morgan, Tesla, GE

    புதிய பதிவுகள்

    முக்கியச் செய்திகள்

    பிரபல்யமானவை

    புதிய பதிவுகள்

    முக்கியச் செய்திகள்

    பிரபல்யமானவை