Welcome to Jettamil

மட்டக்களப்பில் கொந்தளித்த பொதுமக்கள்! கைதானவர்களுக்குச் சட்டத்தரணிகள் ஆஜராகக் கூடாது எனப் போராட்டம்

Share

மட்டக்களப்பில் கொந்தளித்த பொதுமக்கள்! கைதானவர்களுக்குச் சட்டத்தரணிகள் ஆஜராகக் கூடாது எனப் போராட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் கொடூரமான கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கு ஆதரவாக எந்தவொரு சட்டத்தரணியும் நீதிமன்றத்தில் ஆஜராகக்கூடாது என வலியுறுத்தி இன்று புதன்கிழமை (01.04.2026) மட்டக்களப்பு நகரில் பாரிய கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், இத்தகைய கொடூரக் குற்றவாளிகளுக்குச் சட்டப் பாதுகாப்பு கிடைக்கக் கூடாது என்பதற்காகவும் பொதுமக்கள் வீதியில் இறங்கிப் போராடினர்.

அதேவேளை, இந்தச் சம்பவங்கள் தொடர்பில் துரிதமாகச் செயற்பட்டு 24 மணிநேரத்திற்குள் சந்தேகநபர்களைக் கைது செய்த மட்டக்களப்பு பொலிஸாருக்குப் போராட்டக்காரர்கள் தங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தனர்.

பொலிஸாரின் இந்தத் துரித நடவடிக்கை குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த உதவும் எனப் பொதுமக்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை