Welcome to Jettamil

கண்டியில் பாடசாலை மாணவர்கள் விபத்தில் பலி – உடனடியாக நிறுத்தப்பட்ட கிரிக்கெட் போட்டி

Share

கண்டியில் பாடசாலை மாணவர்கள் விபத்தில் பலி – உடனடியாக நிறுத்தப்பட்ட கிரிக்கெட் போட்டி

கண்டி – பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (02.04.2026) காலை நடைபெறவிருந்த புனித சில்வெஸ்டர் மற்றும் வித்யார்த்தா கல்லூரிகளுக்கு இடையிலான 66-ஆவது கிரிக்கெட் போட்டி, ஒரு கோர விபத்தினால் உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

புனித சில்வெஸ்டர் கல்லூரியின் கணிதப் பிரிவைச் சேர்ந்த உயர்தர மாணவன் நெதுலா நிமிடினு, தனது நண்பனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது பேருந்துடன் மோதிச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்தப் விபத்தில் மற்றுமொரு மாணவர் படுகாயமடைந்து கண்டி தேசிய மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார்.

தமது சக மாணவனின் அகால மரணத்தைத் தொடர்ந்து, பல்லேகலே மைதானத்தில் நடைபெற்று வந்த கிரிக்கெட் போட்டியை உடனடியாக இடைநிறுத்த கல்லூரி நிர்வாகங்கள் தீர்மானித்தன.

ஆட்டத்தைக் காணத் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள் மிகுந்த சோகத்துடன் மைதானத்திலிருந்து வெளியேறினர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை