Welcome to Jettamil

ஈரானில் திரண்ட இலட்சக்கணக்கான மக்கள்! டாங்க்சிறிக்கு கண்ணீர் மல்க விடைகொடுத்த தேசம்

Share

ஈரானில் திரண்ட இலட்சக்கணக்கான மக்கள்! டாங்க்சிறிக்கு கண்ணீர் மல்க விடைகொடுத்த தேசம்

இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானியப் புரட்சிகரக் காவற்படையின் கடற்படைத் தளபதி அஸுலா டாங்க்சிறியின் இறுதி ஊர்வலமும் இஸ்லாமிய குடியரசின் 47வது ஆண்டு விழாவும் புதன்கிழமை (1) மிகவும் உணர்ச்சிகரமாகக் கொண்டாடப்பட்டது.

ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க மற்றும் இஸ்ரேலியக் கப்பல்களுக்கு மூடியதன் பின்னணியில் இருந்த மூலோபாய சிற்பியாகக் கருதப்படும் அவரது உடலுக்கு, இலட்சக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

“இறைவன் மிகப்பெரியவன், காமெனியே எமது உன்னதத் தலைவர்” என்ற கோஷங்களுடன் தெஹ்ரான் வீதிகள் அதிரும்படி மக்கள் திரண்டிருந்தனர்.

“பழிக்குப் பழி” என எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திய சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அமெரிக்காவிற்குத் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

இதேவேளை, அமெரிக்கத் தொலைக்காட்சியில் உரையாற்றிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடனான போர் அவசியமானது என மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

“இந்த வேலையை நாங்கள் விரைவில் முடிப்போம்” எனத் தெரிவித்த அவர், ஈரானைத் துடைத்தெறிவதற்கான திட்டங்கள் தயாராக இருப்பதை உறுதிப்படுத்தினார்.

அமெரிக்காவின் இந்த நேரடி எச்சரிக்கையும், ஈரானிய மக்களின் தளராத உறுதியும் வளைகுடா பிராந்தியத்தில் ஒரு மிகப்பெரிய மனிதப் பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் அச்சம் வௌியிட்டுள்ளனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை