ஈரான் இராணுவத் தளபதியின் மருமகள் அமெரிக்காவில் கைது! நாடு கடத்த நடவடிக்கை
2020-ஆம் ஆண்டு அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானியப் புரட்சிகரக் காவற்படையின் முன்னாள் தளபதி காசெம் சுலைமானியின் மருமகள் ஹமிதே சுலைமானி அஃப்ஷர் மற்றும் அவரது மகள் சலினா சாதத் ஹொசைனி ஆகியோர் லொஸ் ஏஞ்சல்ஸில் வைத்து அமெரிக்கப் பாதுகாப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் அமெரிக்காவில் வசிப்பதற்கான ‘கிரீன் கார்டு’ (Green Card) அந்தஸ்தை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ அதிரடியாக ரத்து செய்துள்ளார்.
இவர்கள் இருவரும் அமெரிக்காவில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டே, ஈரானிய ஆட்சியின் பிரசாரங்களை ஊக்குவித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க வீரர்கள் மற்றும் இராணுவத் தளங்கள் மீதான தாக்குதல்களைக் கொண்டாடியதுடன், அமெரிக்காவை ‘மாபெரும் சாத்தான்’ என விமர்சித்ததாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட ஈரானியப் புரட்சிகரக் காவற்படைக்கு (IRGC) இவர்கள் அசைக்க முடியாத ஆதரவை வழங்கியமை விசாரணையில் உறுதியாகியுள்ளது.
அஃப்ஷர் தனது குடும்பத்துடன் 2015-ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் வசித்து வந்துள்ளார். அவரது அகதி அந்தஸ்து கோரிக்கைகள் மோசடியானது எனத் தெரிவித்துள்ள அமெரிக்க அதிகாரிகள், தற்போது அவர்கள் இருவரையும் ‘ICE’ எனப்படும் குடிவரவுத் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.
“பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு வழங்குபவர்களை அமெரிக்கா தனது மண்ணில் அனுமதிக்காது” எனத் தெரிவித்துள்ள ட்ரம்ப் நிர்வாகம், இவர்களை உடனடியாக ஈரானுக்கு நாடு கடத்துவதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளது.
Until recently, Hamideh Soleimani Afshar and her daughter were green card holders living lavishly in the United States.
— Secretary Marco Rubio (@SecRubio) April 4, 2026
Afshar is the niece of deceased Iranian Major General Qasem Soleimani. She is also an outspoken supporter of the Iranian regime who celebrated attacks on…





