Welcome to Jettamil

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாவிட்டால் நரகத்தை சந்திப்பீர்கள் – பாரிய தாக்குதலுக்கு அமெரிக்கா தயார்!

Share

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாவிட்டால் நரகத்தை சந்திப்பீர்கள் – பாரிய தாக்குதலுக்கு அமெரிக்கா தயார்!

ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) உடனடியாகத் திறக்க வேண்டும்; இல்லையெனில் நரகம் கட்டவிழ்த்து விடப்படும்” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஈரானுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 10 நாட்கள் அவகாசம் முடிவடைவதை நினைவுபடுத்தியுள்ளார்.

இன்னும் 48 மணித்தியாலங்களுக்குள் ஈரான் இணங்கி வராவிட்டால், அந்நாட்டின் மீது முன்னெப்போதும் இல்லாத வகையில் பாரிய தாக்குதல்கள் நடத்தப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

இந்தக் காலக்கெடு முடிவடைந்ததும், ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து அமெரிக்கா ஒரு பிரம்மாண்டமான இராணுவ நடவடிக்கையை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, ஈரானின் பிரதான எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவு (Kharg Island) மற்றும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஏனைய தீவுகள், துறைமுகங்களைக் கைப்பற்றும் நோக்கில் அமெரிக்கப் படைகள் தரைவழித் தாக்குதல்களை (Ground Operation) நடத்தத் திட்டமிட்டுள்ளதாக இராணுவப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை