தனது கீழ்த்தரமான புத்தியைச் சிறையிலும் காட்டியுள்ள வித்தியா கொலைக் கைதி
புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதனைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திக் கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பல்லேகல தும்பறை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள கைதி ஒருவர் அநாகரீகச் செயலில் ஈடுபட்டுள்ளார்.
சிறையிலுள்ள கைதிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காகப் பெண் மருத்துவர் ஒருவர் சென்றிருந்த போது, அந்த மருத்துவரைப் பரிசோதனை அறையிலேயே அத்துமீறலுக்கு உட்படுத்த இந்தக் கைதி முயன்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதியைப் பரிசோதித்துக் கொண்டிருந்த போது, அவர் திடீரென மருத்துவர் மீது அத்துமீற முயன்றுள்ளார்.
இதன்போது அங்கிருந்த மருத்துவமனைப் பணியாளர்களும், சிறைக் காவலர்களும் உடனடியாகத் தலையிட்டு மருத்துவரை மீட்டெடுத்ததுடன், கைதியைக் கட்டுப்படுத்தினர்.
இதனால் பெண் மருத்துவர் பெரும் ஆபத்திலிருந்து நூலிழையில் உயிர் தப்பியுள்ளார். இச்சம்பவம் சிறைச்சாலை வட்டாரங்கள் மற்றும் சுகாதாரத் துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையிலும் தனது கீழ்த்தரமான புத்தியைச் சிறையிலும் காட்டியுள்ள இந்தக் கைதி மீது மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கப் பல்லேகல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.





