இன்று நள்ளிரவு முதல் எரிவாயு விலைகள் அதிரடி உயர்வு – லிட்ரோ மற்றும் லாப் நிறுவனங்கள் வெளியிட்ட புதிய விலைப்பட்டியல்
இன்று (05.04.2026) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, பொதுவாக வீடுகளில் பயன்படுத்தப்படும் 12.5 கிலோ கிராம் எரிவாயு கொள்கலனின் விலை 775 ரூபாவால் உயர்த்தப்பட்டு, அதன் புதிய விலை 4,765 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று 5 கிலோ கிராம் கொள்கலன் 1,910 ரூபாவிற்கும், 2.3 கிலோ கிராம் கொள்கலன் 890 ரூபாவிற்கும் இன்று நள்ளிரவு முதல் விற்பனை செய்யப்படவுள்ளது.
லிட்ரோ நிறுவனத்தைத் தொடர்ந்து லாப் சமையல் எரிவாயு நிறுவனமும் தனது விலைகளை அதிரடியாக உயர்த்தியுள்ளது.
இதன்படி 12.5 கிலோ கிராம் லாப் எரிவாயு கொள்கலனின் விலை 1,070 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 5,700 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 5 கிலோ கிராம் லாப் கொள்கலனின் விலை 2,280 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளமை நுகர்வோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




