Welcome to Jettamil

ஈரானை அசிங்கமான வார்த்தைகளால் திட்டிய ட்ரம்ப்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க விடுக்கப்பட்ட கடைசி எச்சரிக்கை

Share

ஈரானை அசிங்கமான வார்த்தைகளால் திட்டிய ட்ரம்ப்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க விடுக்கப்பட்ட கடைசி எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணையை உடனடியாகத் திறக்குமாறு ஈரானுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக மோசமான வார்த்தைகளால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஈரான் ஆட்சியாளர்களை “அறிவற்றவர்கள்” (Crazy Bastards) எனச் சாடியுள்ளார். அது மட்டுமல்லாது தகாத வார்த்தைகளால் பதிவு செய்துள்ளார்.

வரும் செவ்வாய்க்கிழமை ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்களுக்குப் பேராபத்தான நாளாக அமையும் எனவும், ஹோர்முஸைத் திறக்காவிட்டால் ஈரான் நரகத்தை அனுபவிக்க வேண்டியிருக்கும் எனவும் அவர் பகிரங்கமாக மிரட்டியுள்ளார்.

ட்ரம்பின் இந்தப் பதிவில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய விடயம் என்னவென்றால், தனது ஆக்ரோஷமான எச்சரிக்கையின் இறுதியில் அவர் “அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்” (Praise be to Allah) எனக் குறிப்பிட்டுள்ளார்.

48 மணிநேரக் காலக்கெடு முடிவடைவதை அடுத்து, ஈரானின் பொருளாதார முதுகெலும்பாக விளங்கும் மின்சார விநியோகக் கட்டமைப்புகள் மற்றும் போக்குவரத்துப் பாலங்கள் மீது துல்லியமான வான்வழித் தாக்குதல்களை நடத்த அமெரிக்கப் படைகள் தயாராகி வருகின்றன.

ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டதால் உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டைத் தீர்க்க, இராணுவ ரீதியிலான இந்தத் தீர்வு ஒன்றே வழி என ட்ரம்ப் நிர்வாகம் உறுதியாக உள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை