ஈரானுக்கு விழுந்த பேரிடி! உளவுத்துறை தலைவர் மேஜர் ஜெனரல் மஜித் காதேமி கொல்லப்பட்டார்
ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) உளவுத்துறை தலைவர் மேஜர் ஜெனரல் மஜித் காதேமி (Maj. Gen. Majid Kazemi) கொல்லப்பட்டுள்ளதாக ஈரான் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளதாக ஈரான் பாதுகாப்புப் படை குற்றம் சாட்டியுள்ளது.
ஈரானின் உளவுத்துறை நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதில் மிக முக்கியப் பங்கு வகித்த இவரது மரணம், அந்த நாட்டு இராணுவத்திற்கு விழுந்த பேரிடியாகப் பார்க்கப்படுகிறது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானைச் சுற்றியுள்ள முக்கிய குடியிருப்புப் பகுதிகள் மற்றும் இராணுவ இலக்குகளை நோக்கி இன்று அதிகாலை சரமாரியான வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இந்தத் தாக்குதல்களின் போதே மேஜர் ஜெனரல் மஜித் காதேமி இலக்கு வைக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவர் சரியாக எங்கு கொல்லப்பட்டார் என்பது குறித்த விபரங்களை ஈரான் பாதுகாப்புப் படை ரகசியமாக வைத்துள்ள போதிலும், இது ஒரு திட்டமிட்ட படுகொலை (Targeted Assassination) எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.





