Welcome to Jettamil

ஹிஸ்புல்லாக்களின் பொருளாதார முதுகெலும்பைத் தகர்த்த இஸ்ரேல்! பெய்ரூட்டில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மீது சரமாரித் தாக்குதல்

Share

ஹிஸ்புல்லாக்களின் பொருளாதார முதுகெலும்பைத் தகர்த்த இஸ்ரேல்! பெய்ரூட்டில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மீது சரமாரித் தாக்குதல்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா அமைப்பினால் கட்டுப்படுத்தப்படும் ‘அல்-அமானா’ (Al-Amana) நிறுவனத்திற்குச் சொந்தமான இரண்டு பிரதான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மீது இஸ்ரேலியப் படைகள் துல்லியமான தாக்குதல்களை நடத்தியுள்ளன.

ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு எரிபொருள் வழங்கவும், ஹிஸ்புல்லா அமைப்பிற்கு மில்லியன் கணக்கான டாலர்களை லாபமாக ஈட்டிக்கொடுக்கவும் இந்த நிலையங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன.

இந்தத் தாக்குதல் மூலம் ஹிஸ்புல்லாக்களின் பொருளாதார முதுகெலும்பு சிதைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஆபரேஷன் ரோரிங் லயன்’ (Operation Roaring Lion) எனும் பெயரில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் இந்தப் போர் நடவடிக்கையில், இதுவரை 15-க்கும் மேற்பட்ட ‘அல்-அமானா’ எரிபொருள் நிலையங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.

நேற்று நடத்தப்பட்ட தாக்குதல்களில், இஸ்ரேலியப் படைகள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த ஹிஸ்புல்லாக்களின் முக்கிய தலைமையகங்களும் (Headquarters) தகர்க்கப்பட்டுள்ளன.

பெய்ரூட்டின் தெற்குப் பகுதிகளில் உள்ள ஹிஸ்புல்லா கோட்டைகள் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் தொடர்ந்து குண்டுகளை வீசி வருகின்றன.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை