Welcome to Jettamil

இனி புதன்கிழமை விடுமுறை கிடையாது! அரச விடுமுறை ரத்து – அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அதிரடி அறிவிப்பு

gov

Share

இனி புதன்கிழமை விடுமுறை கிடையாது! அரச விடுமுறை ரத்து – அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அதிரடி அறிவிப்பு

இலங்கையில் நிலவிய எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்துச் சிரமங்களைக் கருத்திற்கொண்டு, அரச அலுவலகங்கள், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்பட்டு வந்த விசேட புதன்கிழமை விடுமுறை இனி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8-ஆம் திகதி முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வரும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

எரிபொருள் விநியோகம் சீராகியுள்ள நிலையில், அரச இயந்திரத்தின் வினைத்திறனை அதிகரிக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் புதன்கிழமை முதல் அனைத்து அரச நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் நீதிச் சேவைத் துறைகள் வழமை போன்று இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை