எரிபொருள் விலையில் அதிரடி வீழ்ச்சி – ஜனாதிபதி அநுரவின் பிரம்மாண்ட நிவாரண விலை அறிவிப்பு
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, புதிய நிவாரணப் பொதியொன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இன்று (07.04.2026) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, எரிபொருள், மின்சக்தி மற்றும் எரிவாயு ஆகிய மூன்று முக்கிய துறைகளில் சலுகைகள் வழங்கப்படும் என அறிவித்தார்.
இதன்படி, ஒரு லீற்றர் டீசலுக்கு 100 ரூபாவும், ஒரு லீற்றர் பெட்ரோலுக்கு 20 ரூபாவும் விலைக்குறைப்புச் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த எரிபொருள் சலுகைக்காக அரசாங்கம் மாதம் ஒன்றுக்கு 20 பில்லியன் ரூபா செலவை ஏற்கும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
முதற்கட்டமாக அடுத்த 3 மாத காலத்திற்கு இந்த நிவாரணத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. எனினும், சூப்பர் டீசல் மற்றும் சூப்பர் பெட்ரோல் ஆகியவற்றின் விலைகளில் மாற்றங்கள் இருக்காது எனவும், அவை தற்போதைய சந்தை விலையிலேயே விற்பனை செய்யப்படும் எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.
போக்குவரத்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தத் துணிச்சலான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.





