Welcome to Jettamil

பத்து அம்சத் திட்டம் முற்றிலும் பொய்! – ஈரான் பேச்சுவார்த்தை குறித்து பரவும் செய்திகள் ஒரு மோசடி – டொனால்ட் ட்ரம்ப்!

Share

பத்து அம்சத் திட்டம் முற்றிலும் பொய்! – ஈரான் பேச்சுவார்த்தை குறித்து பரவும் செய்திகள் ஒரு மோசடி – டொனால்ட் ட்ரம்ப்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக முன்னணி ஊடகங்கள் வெளியிட்ட தகவல்கள் அனைத்தும் திட்டமிடப்பட்ட ஒரு மோசடி என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சாடியுள்ளார்.

குறிப்பாக, நியூயார்க் டைம்ஸ் மற்றும் சிஎன்என் ஆகிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள ‘பத்து அம்சத் திட்டம்’ என்பது முற்றிலும் புனையப்பட்டது என அவர் தனது சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.

அமைதி முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களைக் களங்கப்படுத்தும் நோக்கிலேயே இவ்வாறான போலிச் செய்திகள் பரப்பப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

வீழ்ச்சியடைந்து வரும் ஊடகங்கள் என விமர்சித்துள்ள ட்ரம்ப், தவறான செய்திகளை வெளியிடுபவர்களை “தீய தோல்வியாளர்கள்” (Evil Losers) எனச் சாடியுள்ளார்.

அந்தப் பத்து அம்சங்களும் முற்றிலும் புனையப்பட்ட ஒரு மோசடி எனக் குறிப்பிட்டுள்ள அவர், அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக்குவோம் (MAKE AMERICA GREAT AGAIN) எனும் தனது தாரக மந்திரத்தையும் அந்தப் பதிவில் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது சர்வதேச அளவில் பேச்சுவார்த்தைகள் குறித்த குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை