Welcome to Jettamil

போர்நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை! – ட்ரம்பின் அறிவிப்பைத் தூக்கியெறிந்த நெதன்யாகு!

Share

போர்நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை! – ட்ரம்பின் அறிவிப்பைத் தூக்கியெறிந்த நெதன்யாகு!

லெபனான் விவகாரத்தில் தற்போது நிலவும் சூழல் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ள புதிய அறிக்கை சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

லெபனான் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் குறைத்துக் கொள்ளும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னதாகத் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு முற்றிலும் மாறாக, “போர்நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை” என நெதன்யாகு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் வடக்கு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு விடுத்துள்ள விசேட செய்தியில், பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்யும் வரை ஹிஸ்புல்லா அமைப்பினர் மீதான தாக்குதல்கள் தொடரும் என நெதன்யாகு உறுதியளித்துள்ளார்.

ஹிஸ்புல்லா அமைப்பை முழு பலத்துடன் இஸ்ரேல் தொடர்ந்து தாக்கும் என்றும், அந்த அமைப்பை முழுமையாக நிராயுதபாணியாக்குவதே இஸ்ரேலின் இறுதி இலக்கு என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் நிலையான அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதை இலக்காகக் கொண்டே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், ட்ரம்பின் மத்தியஸ்த முயற்சிகளுக்கு மத்தியில் நெதன்யாகு எடுத்துள்ள இந்தத் தீவிர நிலைப்பாடு, அமெரிக்க – இஸ்ரேல் இடையிலான இராஜதந்திர உறவுகளில் விரிசலை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தை உலக நாடுகள் மத்தியில் தோற்றுவித்துள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை