Welcome to Jettamil

ஈரான் ஒத்துழைக்காவிட்டாலும் ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படும்! – டொனால்ட் ட்ரம்ப் அதிரடி எச்சரிக்கை

Share

ஈரான் ஒத்துழைக்காவிட்டாலும் ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படும்! – டொனால்ட் ட்ரம்ப் அதிரடி எச்சரிக்கை

உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணை விரைவில் மீண்டும் திறக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஈரான் ஒத்துழைப்பு வழங்கினாலும் வழங்காவிட்டாலும், கப்பல் போக்குவரத்தை உறுதி செய்வதற்கான முயற்சிகள் தடையின்றி நடக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.

சுமூகமான தீர்வு எட்டப்படாவிட்டால், “வேறொரு வழியில்” அதனைத் திறக்கத் தயாராக இருப்பதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளமை சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் இன்று ஆரம்பமாகியுள்ள அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கம் குறித்து விளக்கிய ட்ரம்ப், ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை உருவாக்கக் கூடாது என்பதை உறுதி செய்வதே தங்களின் 99 சதவீத இலக்கு என்று குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் அணு ஆயுதக் கனவைத் தடுப்பதே இந்தப் பேச்சுவார்த்தையின் சாராம்சம் என்றும், ஹோர்முஸ் நீரிணை விவகாரம் தானாகவே முடிவுக்கு வராவிட்டால் அமெரிக்கா தனது பலத்தைப் பயன்படுத்தும் என்றும் அவர் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை