இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தையில் வரலாற்றுத் திருப்பம்! முதற்கட்ட நேரடிப் பேச்சுவார்த்தைகள் நிறைவு
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடந்த சில மணிநேரங்களாக நடைபெற்று வந்த அமெரிக்கா மற்றும் ஈரான் தூதுக்குழுவினருக்கு இடையிலான முதற்கட்ட நேரடிப் பேச்சுவார்த்தைகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக Al Jazeera செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
நீண்ட இழுபறிக்குப் பின்னர், இரு நாடுகளுக்கும் இடையே சில முக்கிய விடயங்களில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இது மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தைத் தணிப்பதற்கான ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
இதுவரை எட்டப்பட்ட உடன்படிக்கைகளில் இரு தரப்பினருக்கும் உள்ள இணக்கப்பாட்டை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தும் வகையில், தற்போது இரு நாடுகளின் பிரதிநிதிகளும் எழுத்துப்பூர்வமான ஆவணங்களைப் பரிமாறிக்கொண்டு வருவதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.





