சின்னத்திரை நடிகை சுபாஷினியின் இறுதி சடங்கு இலங்கையில் – ஜா-எலாவில் அவரது இல்லத்தில் அஞ்சலி
சென்னையில் விபரீத முடிவெடுத்து உயிரிழந்த பிரபல சின்னத்திரை நடிகை சாஷ்வி பாலா எனும் சுபாஷினி பாலசுப்பிரமணியத்தின் பூதவுடல், தற்போது இலங்கையில் உள்ள அவரது குடும்ப இல்லத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஜா-எலாவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள பூதவுடலுக்கு, உறவினர்கள் மற்றும் கலைத்துறையினர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நடிகை சுபாஷினியின் இறுதிச் சடங்குகள் நாளை (12.04.2026) வெலிசர பொது மயானத்தில் இடம்பெறவுள்ளதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாகச் சென்னையில் அவர் எடுத்த விபரீத முடிவு, சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
புகழ்பெற்ற பல தமிழ் சீரியல்களில் நடித்துப் புகழ்பெற்ற இவரின் மறைவு, கலைத்துறைக்கு ஒரு பெரும் இழப்பாகப் பார்க்கப்படுகிறது.





