கொழும்பு துறைமுகத்தில் பாகிஸ்தான் போர்க்கப்பல்கள்! கடற்படைப் பயிற்சியில் ஈடுபடத் திட்டம்
பாகிஸ்தான் கடற்படையின் ‘PNS TAIMUR’ மற்றும் ‘PNS ASLAT’ ஆகிய போர்க்கப்பல்கள் 2026 ஏப்ரல் 12 ஆம் திகதியான நேற்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.
இலங்கை கடற்படையினர் தங்களது பாரம்பரிய முறைப்படி மேளதாளங்களுடன் இந்தக் கப்பல்களுக்குச் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
‘PNS TAIMUR’ கப்பலுக்குக் கெப்டன் நியாமத் சயீத் கானும் (Niamat Saeed Khan), ‘PNS ASLAT’ கப்பலுக்குக் கெப்டன் நாதிர் மத்தீன் அப்ரிடியும் (Nadir Mateen Afridi) கட்டளை அதிகாரிகளாகத் தலைமை தாங்குகின்றனர்.
இந்தப் பயணத்தின் முக்கிய அம்சமாக, இலங்கை மற்றும் பாகிஸ்தான் கடற்படைகள் இணைந்து நடத்தும் ‘லயன் ஸ்டார் V’ (LION STAR V) என்ற இருதரப்பு கடற்படைப் பயிற்சியில் இந்தக் கப்பல்கள் ஈடுபடவுள்ளன.





