ஹோர்முஸ் நீரிணை மீண்டும் முடக்கம்! ட்ரம்ப்பின் முற்றுகை அறிவிப்பால் அலறியோடும் கப்பல்கள்
ஹோர்முஸ் நீரிணை வழியாகக் குறைவான அளவில் நடைபெற்று வந்த கப்பல் போக்குவரத்து, தற்போது முழுமையாக முடங்கியுள்ளதாக ‘Lloyd’s List’ கடல்சார் புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளது.
ஈரானுக்கு எதிராகப் பாரிய கடற்படை முற்றுகையை (Blockade) அமல்படுத்தப்போவதாக ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்த அடுத்த சில நிமிடங்களிலேயே, நீரிணையை நோக்கி வந்துகொண்டிருந்த கப்பல்கள் அனைத்தும் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளன.
சில கப்பல்கள் நடுக்கடலில் இருந்து மீண்டும் வந்த திசைக்கே திரும்பிச் செல்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சனிக்கிழமை அன்று இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை காரணமாக ஏற்பட்ட தற்காலிக போர்நிறுத்தத்தை நம்பி, பல நிறுவனங்கள் தங்களது கப்பல்களை வெளியேற்றத் துணிந்தன.
ஆனால், ட்ரம்ப்பின் ‘இறுதி எச்சரிக்கை’ மற்றும் முற்றுகை அறிவிப்பு அந்த நம்பிக்கையைச் சிதைத்துள்ளது.
தற்போது வெளியேறும் நோக்கில் வந்துகொண்டிருந்த குறைந்தது இரண்டு பெரிய கப்பல்கள் மீண்டும் திரும்பிச் சென்றுவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.




