அமெரிக்கா அணுகுமுறை மாறினால் ஒப்பந்தம் சாத்தியம் – ஈரான் ஜனாதிபதி
அமெரிக்கா தனது அணுகுமுறையை மாற்றினால், இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தம் எட்டுவது இன்னும் சாத்தியமே என ஈரான் ஜனாதிபதி மசூத் பெசேஷ்கியன் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “அமெரிக்க அரசு தனது ஆணவமான நிலைப்பாட்டை கைவிட்டு, ஈரான் மக்களின் உரிமைகளை மதித்தால், ஒப்பந்தத்தை அடையும் வழிகள் நிச்சயமாக உருவாகும்” என அவர் குறிப்பிட்டார். இந்த கருத்து பாரசீக மொழியில் வெளியிடப்பட்டதுடன், பின்னர் ஆங்கிலத்திற்கும் மொழிபெயர்க்கப்பட்டு X சமூக வலைதளத்தில் பகிரப்பட்டது.
மேலும், பேச்சுவார்த்தை குழுவினரின் முயற்சிகளை பாராட்டிய அவர், குறிப்பாக தனது சகோதரர் டாக்டர் முகம்மது பகீர் காளிபாப் அவர்களுக்கு நன்றி தெரிவித்து, “இறைவன் உங்களுக்கு வலிமை அளிக்கட்டும்” எனவும் கூறினார்.




