Welcome to Jettamil

மீண்டும் ஈரான் – அமெரிக்கா பேச்சுவார்த்தை! – ட்ரம்ப் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

trump

Share

மீண்டும் ஈரான் – அமெரிக்கா பேச்சுவார்த்தை! – ட்ரம்ப் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான நேரடிப் பேச்சுவார்த்தைகள் அடுத்த இரண்டு நாட்களுக்குள் பாகிஸ்தானில் மீண்டும் தொடங்கலாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நியூயோர்க் போஸ்ட் நிருபரிடம் தொலைபேசி வாயிலாகப் பேசிய அவர், “அடுத்த இரண்டு நாட்களில் ஏதாவது நடக்கக்கூடும், அங்கு செல்ல நாங்கள் அதிக ஆர்வம் காட்டுகிறோம்” எனக் குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் ஃபீல்ட் மார்ஷல் ஜெனரல் ஆசிம் முனீர் இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கான சூழலைச் சிறப்பாக உருவாக்கி வருவதாக ட்ரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் உலகளாவிய எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், ஈரானை மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டுவர ட்ரம்ப் தீவிரமாக முயன்று வருகிறார்.

சனிக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் முட்டுக்கட்டையை எட்டிய நிலையில், ஐரோப்பிய நாடுகளின் ஒத்துழைப்பின்மையை ட்ரம்ப் கடுமையாகச் சாடியுள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை