லெபனானுக்கு கைகொடுக்கும் கனடா! 40 மில்லியன் டாலர் அவசர நிதியுதவி அறிவிப்பு
லெபனானில் நிலவும் இக்கட்டான மனிதாபிமானச் சூழலைக் கருத்திற்கொண்டு, 40 மில்லியன் டாலர் நிதியுதவியை வழங்க கனடா முன்வந்துள்ளது.
லெபனான் வெளியுறவு அமைச்சர் யூசெப் ராஜி மற்றும் கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் ஆகியோருக்கு இடையிலான தொலைபேசி உரையாடலின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிதியானது சர்வதேச நிறுவனங்கள் ஊடாக லெபனானின் அத்தியாவசியத் தேவைகளுக்காக விநியோகிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உரையாடலின் போது, லெபனானின் இறையாண்மைக்கு கனடா தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளதோடு, லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் வான்வழித் தாக்குதல்களுக்குக் கடும் கண்டனத்தையும் வெளியிட்டுள்ளது.




