ஹார்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு! – கடும் கோபத்தில் இந்தியா
ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் இந்தியக் கொடியுடன் பயணித்த இரண்டு சரக்குக் கப்பல்கள் மீது ஈரானிய கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈராக் கச்சா எண்ணெயைச் சுமந்து வந்த ‘சான்மார் ஹெரால்ட்’ (Sanmar Herald) மற்றும் ‘ஜக் அர்னவ்’ (Jag Arnav) ஆகிய இரண்டு சூப்பர் டேங்கர் கப்பல்களே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.
ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படைக்கு (IRGC) சொந்தமான படகுகள் இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்தத் துயரமான சம்பவத்தைத் தொடர்ந்து, டெல்லியிலுள்ள ஈரான் தூதர் முகமது ஃபதாலிக்கு (Mohammad Fathali) இந்திய வெளியுறவு அமைச்சகம் இன்று அவசர அழைப்பு விடுத்துத் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
சர்வதேச கடல் எல்லை விதிகளுக்கு முரணாக நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல் குறித்து இந்தியா தனது அதிருப்தியைப் பதிவு செய்துள்ளது.




