அமெரிக்கப் போர்க்கப்பல்கள் மீது ஈரான் அதிரடி ட்ரோன் தாக்குதல்! ‘Touska’ கப்பல் சிறைபிடிப்புக்குப் பதிலடி
ஈரானிய வணிகக் கப்பலான ‘Touska’வை அமெரிக்கப் படைகள் தாக்கிச் சிறைபிடித்ததற்குப் பதிலடியாக, அமெரிக்கப் போர்க்கப்பல்கள் மீது ஈரான் இன்று அதிரடி ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ‘Touska’ கப்பலை, ஹார்முஸ் நீரிணையில் வைத்து அமெரிக்கா சட்டவிரோதமாகக் கைப்பற்றியதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்திருந்த நிலையில், தற்போது அமெரிக்கப் படைகளை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளது. “எமது கப்பலைத் தாக்கிப் பறித்த அமெரிக்காவிற்குத் தகுந்த பாடம் புகட்டப்பட்டுள்ளது” என ஈரான் தெரிவித்துள்ளது.
இந்த ட்ரோன் தாக்குதலில் எத்தனை அமெரிக்கக் கப்பல்கள் சேதமடைந்தன மற்றும் உயிர்ச் சேதங்கள் குறித்த முழுமையான விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முற்றுகையை உடைக்கப் போவதாக ஈரான் சூளுரைத்துள்ளதால், இப்பகுதியில் எந்நேரமும் முழு அளவிலான போர் வெடிக்கலாம் என அஞ்சப்படுகிறது.





