Welcome to Jettamil

மத்திய கிழக்கின் வல்லரசானது இஸ்ரேல்! – பிரதமர் நெதன்யாகு அதிரடி முழக்கம்

Share

மத்திய கிழக்கின் வல்லரசானது இஸ்ரேல்! – பிரதமர் நெதன்யாகு அதிரடி முழக்கம்

இஸ்ரேலின் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற அரசு விழாவில் உரையாற்றிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானுக்கு எதிரான போரில் இஸ்ரேல் அடைந்துள்ள இராணுவ முன்னேற்றங்களைச் சுட்டிக்காட்டினார்.

ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்கள் வெற்றிகரமாகச் சிதைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இஸ்ரேலை ஆபத்துக்குள்ளாக்கும் ஈரானின் திறனைத் தங்கள் படைகள் முறியடித்துள்ளதாகப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

இதன் மூலம் மத்திய கிழக்கின் பிராந்திய வல்லரசாக (Regional Superpower) இஸ்ரேலின் நிலை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் முழக்கமிட்டார்.

“அமெரிக்காவுடன் இணைந்து உலகில் உள்ள தீய சக்திகளுக்கு எதிரான போரை இஸ்ரேல் முன்னின்று வழிநடத்துகிறது” என நெதன்யாகு தனது உரையில் தெரிவித்தார்.

ஈரானின் இராணுவ அமைப்புகளுக்கு வழங்கப்பட்ட பலத்த அடியால், அந்த நாடு தற்போது தனது உயிர்வாழ்விற்காகப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சாடினார்.

இந்தப் போர்க்காலச் சூழலிலும் புதிய சர்வதேசக் கூட்டணிகள் உருவாகியுள்ளதாகவும், இது அமைதி வட்டத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கான புதிய வாய்ப்புகளைத் திறந்துவிட்டுள்ளதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை