Welcome to Jettamil

நான்கு கால்களுடன் பிறந்த அபூர்வ கோழிக் குஞ்சு – மட்டக்களப்பில் வியக்க வைத்த அதிசய நிகழ்வு

Share

நான்கு கால்களுடன் பிறந்த அபூர்வ கோழிக் குஞ்சு – மட்டக்களப்பில் வியக்க வைத்த அதிசய நிகழ்வு

மட்டக்களப்பு ஓட்டமாவடி பகுதியில் நான்கு கால்களுடன் அபூர்வ கோழிக் குஞ்சு பிறந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம், ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீராவோடை எல்லை வீதியில் வசிக்கும் முகம்மட் நஸீர் என்பவரது வீட்டிலேயே இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 2-ஆம் திகதி 11 முட்டைகளை அவர் அடைகாக்க வைத்த நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை 9 குஞ்சுகள் பொரித்துள்ளன. இதில் ஒரு கோழிக் குஞ்சு மட்டும் நான்கு கால்களுடன் பிறந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கறுப்பு மற்றும் மஞ்சள் நிறம் கலந்த தோற்றத்தில் காணப்படும் இந்தச் சிறிய கோழிக் குஞ்சு, நான்கு கால்களுடன் மிகவும் ஆரோக்கியமாக வலம் வருகின்றது.

இதற்குக் கூடுதல் கால்கள் இருப்பினும், மற்ற குஞ்சுகளைப் போலவே சுறுசுறுப்பாக இயங்குவதைக் காண முடிகிறது.

இந்த அபூர்வ நிகழ்வு குறித்துத் தகவலறிந்த அப்பகுதி மக்கள், முகம்மட் நஸீரின் வீட்டிற்குச் சென்று இந்த அழகிய கோழிக் குஞ்சை ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை