பிளவு என்ற பேச்சுக்கே இடமில்லை ; அமெரிக்காவுக்கு ஈரான் தலைவர்களின் அதிரடி பதிலடி!
ஈரான் அரசியல் மற்றும் இராணுவத் தலைமைக்குள் கடும் மோதல் நிலவி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், இதற்குப் பதிலடி கொடுத்துள்ள ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான், நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் மற்றும் நீதித்துறை தலைவர் கோலம் ஹொசைன் மொஹ்சேனி எஜேய் ஆகியோர், ஈரான் தலைமையில் எந்தப் பிளவும் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
“ஈரானில் மிதவாதிகள் அல்லது தீவிரவாதிகள் என்ற பாகுபாடு கிடையாது; நாங்கள் அனைவரும் ஈரானியர்கள் மற்றும் புரட்சியாளர்கள்” என அவர்கள் கூட்டாக முழக்கமிட்டுள்ளனர்.




