Welcome to Jettamil

இந்தியா ஒரு நரகப் படுகுழி! – டொனால்ட் ட்ரம்பின் சர்ச்சைப் பேச்சுக்கு இந்தியா கடும் பதிலடி

Share

இந்தியா ஒரு நரகப் படுகுழி! – டொனால்ட் ட்ரம்பின் சர்ச்சைப் பேச்சுக்கு இந்தியா கடும் பதிலடி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் ஆற்றிய உரை ஒன்றில், உலக நாடுகளைப் பற்றிக் குறிப்பிடும் போது, இந்தியாவை “நரகப் படுகுழி” என விமர்சித்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவைப் பற்றி இத்தகைய தரம் தாழ்ந்த வார்த்தையைப் பயன்படுத்திய ட்ரம்பின் செயலுக்கு இந்திய அரசு தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், ட்ரம்பின் கருத்துக்கள் “தகவலற்றவை, பொருத்தமற்றவை மற்றும் தரம் தாழ்ந்தவை” என மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.

இந்தியா – அமெரிக்கா இடையிலான நீண்டகாலப் பரஸ்பர மரியாதை மற்றும் பொதுவான நலன்களை அடிப்படையாகக் கொண்ட இராஜதந்திர உறவின் யதார்த்தத்தை இக்கருத்துக்கள் பிரதிபலிக்கவில்லை” என ரன்தீர் ஜெய்ஸ்வால் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்கத் தூதரகம் இது குறித்து விளக்கம் அளித்துள்ள போதிலும், ஒரு நாட்டின் ஜனாதிபதியே இத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்தியது இந்திய மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை