இன்று காலை ரயில் தடம் புரண்டு விபத்து ; பயணிகள் பலர் காயம் – கடலோர மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து முடக்கம்!
பெலியத்தையிலிருந்து கொழும்பு மருதானை நோக்கிப் பயணித்த ‘சாகரிகா’ (Sagarika) கடுகதி அலுவலக சேவை ரயில், இன்று காலை வடுவ பகுதியில் திடீரெனத் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
விபத்தின் போது ரயிலின் பிரதான என்ஜின் மற்றும் பயணிகள் பெட்டிகள் தனித்தனியாகப் பிரிந்ததில், உள்ளே இருந்த பயணிகள் பலர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அலுவலகம் செல்லும் பரபரப்பான காலை நேரத்தில் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளதால், ஆயிரக்கணக்கான பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்தத் தடம் புரர்வு காரணமாகக் கடலோர இரயில் பாதையின் இரு வழித்தடங்களும் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் கொழும்பு மற்றும் மாத்தறை நோக்கிச் செல்லவிருந்த அனைத்து ரயில் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
தடம் புரண்ட ரயிலை மீண்டும் சீரமைக்கும் பணிகளில் ரயில்வே திணைக்கள அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.





