Welcome to Jettamil

மட்டக்களப்பு மாநகர சபை பொது நூலகத்தின் புதிய கட்டடம் பொதுமக்களிடம் கையளிப்பு!

Share

மட்டக்களப்பு மாநகர சபை பொது நூலகத்தின் புதிய கட்டடம் பொதுமக்களிடம் கையளிப்பு!

சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் சமமான முறையில் அறிவையும் தகவல்களையும் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதையும், பிரதேச கலாசார மரபுகள் மற்றும் பாரம்பரியங்களைப் பரவலாக்கி, அவற்றை எதிர்காலச் சந்ததியினருக்காகப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டு, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முழுமையானதொரு நூலகமாக இதன் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு மக்கள் பயன்பாட்டிற்காகப் புதுப்பிக்கப்பட்ட நூலகக் கட்டடம், இன்று (20) புதன்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் உத்தியோகபூர்வமாகப் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, “அறிவைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் சமூகத்தின் ஒற்றுமை, சகவாழ்வு மற்றும் நல்லிணக்கம் ஆகியவை வலுப்படுத்தப்படும் என்று அரசாங்கம் என்ற வகையில் நாம் திடமாக நம்புகிறோம்” என்று குறிப்பிட்டார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை