நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – சஜித் அழைப்பு
நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் அரசியல் சுதந்திரத்தைப் பாதுகாக்க அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், பண்டைய காலங்களில் பல்வேறு சவால்களை எதிர்கொண்ட போதிலும் முன்னோர்கள் ஒற்றுமையாக நாட்டைப் பாதுகாத்ததாகக் குறிப்பிட்டார்.
தற்போதைய சூழலிலும் இன, மத, அரசியல் வேறுபாடுகளை மறந்து அனைவரும் கைகோர்த்து நாட்டின் இறையாண்மையையும் தேசிய ஒற்றுமையையும் பாதுகாக்க முன்வர வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.
மேலும், புத்த சாசனத்தின் நிலைபேற்றிற்கும் சமயப் பணிகளின் முன்னேற்றத்திற்கும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், நாட்டின் ஆள்புல ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரத்தையும் எவ்வித சமரசமுமின்றி பாதுகாக்க வேண்டும் என தெரிவித்தார்.





