உங்கள் ஆயுளைப் பாதியாகக் குறைக்கும் ஆபத்தான உணவுகள்; இன்றே தவிக்காவிட்டால் பேராபத்து!
இன்றைய காலகட்டத்தில் டயட் மற்றும் நவீன நாகரீகம் என்ற பெயரில் மக்கள் எடுத்துக் கொள்ளும் உணவுகள், உடலில் பல கடுமையான நோய்களைக் கொண்டு வருகின்றன.
குறிப்பாக, சிப்ஸ் பாக்கெட்டுகள், நூடுல்ஸ் மற்றும் ஜங்க் ஃபுட் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சேர்க்கப்படும் அதிகப்படியான சர்க்கரை, உப்பு மற்றும் கெமிக்கல்கள் உடலில் சர்க்கரை நோய் மற்றும் கொலஸ்ட்ராலை உண்டாக்குகின்றன.
இது இறுதியில் மாரடைப்பு (Heart Attack) மற்றும் பக்கவாதத்திற்கு (Stroke) வழிவகுக்கிறது. அதேபோல், கடைகளில் விற்கப்படும் கலர் கலரான கார்பனேட்டட் குளிர்பானங்களை மக்கள் விரும்பி குடிக்கின்றனர். இதில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, உடலில் இன்சுலின் எதிர்ப்பை (Insulin Resistance) அதிகரித்து, கல்லீரல் பாதிப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
மேலும், சிக்கன், முட்டை போன்ற சத்தான உணவுகளை அதிக வெப்பநிலையில் எண்ணெயில் பொரிக்கும் போது, அதிலுள்ள நல்ல கொழுப்புகள் நஞ்சாக மாறி இரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்துகின்றன.
சோடியம் குளோரைடு எனப்படும் உப்பு, ஊறுகாய், டின்களில் அடைக்கப்பட்ட உணவுகள் மற்றும் கருவாடு ஆகியவற்றில் அதிகமாக உள்ளது.
இந்த அதிகப்படியான உப்பு இரத்தக் குழாய்களைச் சேதப்படுத்தி, ஒரு கட்டத்தில் சிறுநீரகங்களையே (Kidneys) முற்றிலும் செயலிழக்கச் செய்கிறது.
உறைய வைக்கப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளாலும் உடலுக்குப் பல நோய்கள் ஏற்படுவதால், ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு இயற்கை உணவுகளுக்கு மாறுவதே ஒரே வழி என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.





