Welcome to Jettamil

மலையாள சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் சலீம் குமார் உயிரிழப்பு – அதிர்ச்சியில் திரையுலகம்

Share

மலையாள சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் சலீம் குமார் உயிரிழப்பு – அதிர்ச்சியில் திரையுலகம்

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரும் தேசிய விருது பெற்ற கலைஞருமான சலீம் குமார் (வயது 56) உடல்நலக்குறைவால் காலமானார்.

திடீர் உடல்நலக் குறைவு காரணமாக அவர் நேற்று காலை கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கேரள மாநிலம் பரவூரைச் சேர்ந்த சலீம் குமார், தனது கலை வாழ்க்கையை மிமிக்ரி கலைஞராக தொடங்கினார். பின்னர் 1997ஆம் ஆண்டு வெளியான “இஷ்டமானு நூறு வட்டம்” திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நடிகராக அறிமுகமானார்.

அதன் பின்னர் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர வேடங்களிலும் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த அவர், மலையாள சினிமாவில் தனித்துவமான இடத்தை பிடித்தார்.

2010ஆம் ஆண்டு வெளியான “ஆடமின்டே மகன் அபு” திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக தேசிய திரைப்பட விருதில் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார். மேலும் பல கேரள மாநில திரைப்பட விருதுகளையும் அவர் வென்றுள்ளார்.

நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநராகவும் தடம் பதித்த சலீம் குமார், “கருத்த யூதன்” திரைப்படத்தின் கதைக்காக கேரள மாநில அரசின் சிறந்த கதைக்கான விருதையும் பெற்றிருந்தார்.

மலையாள திரையுலகைத் தாண்டி தமிழிலும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்திய அவர், “நேரம்”, “நெடுஞ்சாலை”, “மரியான்” உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அவரது மறைவு திரையுலகில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை