Welcome to Jettamil

சொல்லிசைப் பாடகரின் விடுதலை ஜனாதிபதியின் கைகளில்! – சிறீதரன் எம்பி அதிரடித் தகவல்!

Share

சொல்லிசைப் பாடகரின் விடுதலை ஜனாதிபதியின் கைகளில்! – சிறீதரன் எம்பி அதிரடித் தகவல்!

கிளிநொச்சியைச் சேர்ந்த வளர்ந்து வரும் சொல்லிசைப் பாடகரான சங்கீத்சன், கடந்த வாரம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இன்று திங்கட்கிழமை (08) காலை சிறைச்சாலைக்கு நேரில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், அந்த இளைஞனைச் சந்தித்து அவரது நிலை குறித்துக் கேட்டறிந்தார்.

அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சிறீதரன், “சங்கீத்சன் எந்தவொரு தவறும் செய்யவில்லை; அவர் தனது கருத்துக்களைச் சொல்லிசைப் பாடலாக மட்டுமே வெளிப்படுத்தியுள்ளார். ஆனால், அதனைப் பாதுகாப்புத் தரப்பிற்கு மொழிபெயர்த்தவர்கள் திட்டமிட்டே தவறான அர்த்தங்களைக் கொடுத்து, அவரைப் பயங்கரவாதச் சட்டத்திற்குள் சிக்க வைத்துள்ளனர்” எனக் குற்றம் சாட்டினார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதால், சாதாரண நீதிமன்றங்களோ அல்லது மேன்முறையீட்டு நீதிமன்றமோ இவருக்கு உடனடியாகப் பிணை வழங்க முடியாது என்றும், உச்சநீதிமன்றம் சென்றே பிணை பெற வேண்டும் என்பதால் அதற்கு நீண்ட காலம் எடுக்கும் என்றும் சிறீதரன் சுட்டிக்காட்டினார்.

இதனால், ஜனாதிபதியின் பொது மன்னிப்பு அல்லது ஜனாதிபதியின் கருணையின் அடிப்படையில் மட்டுமே இந்த இளைஞனை உடனடியாக விடுதலை செய்ய முடியும்.

இது குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும், நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள 4 நாட்கள் நாடாளுமன்ற அமர்வுகளின் போது ஜனாதிபதியை நேரடியாகச் சந்தித்துச் சங்கீத்சனின் விடுதலைக்காக அழுத்தங்களைச் செலுத்தவுள்ளதாகவும் சிறீதரன் எம்பி உறுதியளித்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை