Welcome to Jettamil

யாழ் பருத்தித்துறை துறைமுகம் தொடர்பில் இந்தியா – சீனா இடையே கடும் போட்டி

Share

யாழ் பருத்தித்துறையில் அமைந்துள்ள மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான பொறுப்பை யார் பெறுவது என்பது தொடர்பில் இந்தியா – சீனா இடையே போட்டி நிலை உருவாகியுள்ளது.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கம் இணைந்த நிதி உதவியுடன் பருத்தித்துறை துறைமுகத் திட்டத்தை செயற்படுத்துவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

கொழும்பு துறைமுக திட்டத்துக்கு நிகராக வடமாகாணத்தில் தொழில் வாய்ப்புகளை வழங்கும் பொருட்டு பாரிய நிதி முதலீட்டில் குறித்த மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரைபடமும் தயாரிக்கப்பட்டது.

4 வருடங்களுக்குள் நிறைவடையும் என்ற எதிர்பார்ப்பில் பின்வரும் அம்சங்கள் குறித்த மீன்பிடித் துறைமுகத்தில் முதற்கட்ட வேலைகளுக்கான தயார்படுத்தல்கள் இடம்பெற்றது.

குறித்த திட்டத்தை செயல்படுத்தவிடாது சிலர் கடிதப் பரிமாற்றங்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் அனுப்பியிருந்தனர்.

ஆயினும் குறித்த திட்டத்தை செயல்படுத்துமாறு பருத்தித்துறையைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஆசியா விருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

தற்போது ஆசிய அபிவிருத்தி வங்கி குறித்த திட்டத்தை செயற்படுத்துவதற்கு தயாராக இருக்கின்ற நிலையில் இந்தியாவும் சீனாவும் தமது விருப்பங்களை கடற்தொழில் அமைச்சிடம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான நிலையில் இந்தியாவின் தமிழ் நாட்டுக்கு மிகவும் அண்மையில் உள்ள பருத்தித்துறைக் கடற்பகுதியை அண்மையில் யாழ்.வந்த சீனத் தூதுவர் பார்வையிட்டமை இதற்கான முன்னேற்பாடாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை