வடமாகாணத்தில் எதிர்வரும் 9ம் திகதி தொடக்கம் 13ம் திகதிவரை பல பகுதிகளிலும் மிதமானது தொடக்கம் கனமானதுவரை மழை பெய்யும் வாய்ப்புள்ளது என யாழ்.பல்கலைகழக புவியியல்துறை விரிவுரையாளர் நா.பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போதைய காலநிலையில் வடமாகாணத்தில்பனி பொழிவு அதிகரித்துள்ளது அண்ணாவும் தெரிவித்துள்ளார் .
எனினும் எதிர்வரும் 9ம் திகதி தொடக்கம் 13ம் திகதிவரை வடமாகாணத்தின் பல பகுதிகளிலும் மிதமானது தொடக்கம் கனமானதுவரை மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

தற்போதைக்கு வடமாகாணத்தின் உள்நில பகுதிகளில் குறிப்பாக ஏ-9 வீதியை அண்மித்த பகுதிகளில் இரவு வெப்பநிலை 17 செல்சியஸ்வரை குறைவடையகூடிய சாத்தியகூறுகள் உள்ளன.
அடுத்தவாரம் மழையை எதிர்பார்க்க முடியும் என்பதால் விவசாயிகள் நெல் அறுபடையை முன்கூட்டியே திட்டமிடுவது உகந்தது என யாழ்.பல்கலைகழக புவியியல்துறை விரிவுரையாளர் நா.பிரதீபராஜா குறிப்பிட்டுள்ளார்.





