வடமராட்சி மண்ணில் இசைக்குயில் கில்மிசாவுக்கு மாபெரும் கௌரவிப்பு விழா
தமிழகத்தின் சீதமிழ் தொலைக்காட்சியின் சரிகமப வெற்றியாளர் இசைக்குயில் கில்மிசாவுக்கு மாபெரும் கௌரவிப்பு விழா 18-02-2024 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை,மாலை 03 மணிக்கு வடமராட்சி மண்ணில் நடைபெற உள்ளது.
கில்மிசாவின் பேரன், பேர்த்தி திரு,திருமதி தர்மநாதன் லீலாவதி தம்பதியினரது அல்வாய் வடக்கு இளங்கோ சனசமூக நிலையத்தைச் சேர்ந்தவர்கள் இந்தக் கௌரவிப்பை தமது மைதானத்தின் வேலுப்பிள்ளை கனகம்மா அரங்கில் ஏற்பாடு செய்துள்ளனர்.
ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் மு.அனாதரட்சகன் தலைமையில் நடைபெற உள்ள நிகழ்வில் வரவேற்புரையை எழுத்தாளர் வேதநாயகம் தபேந்திரன் நிகழ்த்த உள்ளார்.
முதன்மை விருந்தினராக மன்னார் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் பங்கேற்க உள்ளார்.
சிறப்பு விருந்தினர்களாக பருத்தித்துறை பிரதேச செயலர் சி.சத்தியசீலன், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை விரிவுரையாளர் கலாநிதி சியாமளங்கி கருணாகரன்,
கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் விரிவுரையாளர் வேல்நந்தகுமார் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
வாழ்த்துரைகளை கரவெட்டி பிரதேச வைத்திய அதிகாரி வே.கமலநாதன், ரூபவாஹினி ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஓய்வு பெற்ற பணிப்பாளர் சி.வன்னியகுலம்,
உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் ஆசிரியைதிருமதி.கீதாமணி கிரிதரன்,அரியாலை சிறிகலைமகள் சனசமூக நிலையத்தின் செயலாளர் நா.குமணதாசன், ஓய்வுநிலை விமானப் பொறியியலாளர் ஆ.சிவலிங்கம், ஓய்வுபெற்ற கிராம அலுவலர் தி.வரதராசன், சாரங்கா இசைக்குழுவின் இயக்குநர் இ.வதனவாசன், பருத்தித்துறைத் தபாலதிபர் அ.அருளானந்தசோதி,
அச்செழு பாடசாலை அதிபர் மு.இராஜவரோதயன், வடமராட்சி பனை தென்னைவள அ.கூ.ச. பொதுமுகாமையாளர் மு.நவனேசன், யாழ் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற உத்தியோகத்தர் இ.குகதாசன் ஆகியோர் நிகழ்த்த உள்ளனர்.