தனியார் பேருந்து சாரதி மீது பருத்தித்துறையில் வாள் வெட்டு
வடமராட்சி பருத்தித்துறை பேரூந்து நிலையத்தில்வைத்து வடமராட்சி கிழக்கு தனியார் போக்கு வரத்து பேருந்து சாரதி மீது வாள்வெட்டு தாக்குதல் நேற்று 10/01/2024 புதன்கிழமை அதிகாலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்தவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
நேற்று அதிகாலையில் முகமூடி அணிந்து உந்துருளியில் வந்தவர்களால் பருத்தித்துறையிலிருந்து கட்டைக்காடு நோக்கு பயண சேவையில் ஈடுபடும் வடமராட்சி கிழக்கு தனியார் போக்குவரத்து சேவை சங்க பேருந்திற்க்கு அருகில் வந்து வடமராட்சி கிழக்கு தனியார் பேருந்து உரிமையாளரும் சாரதியுமான தேவகுமார் என்பவர் மீது சரமாரியான வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் படுகாயமடைந்த பேருந்து சாரதியை ஊடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்பயபாணம் போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வாள்வெட்டை நடத்தியவர்கள் தொடர்பில் பருத்தித்துறை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.