அனைத்து சட்டத்தரணிகளும் இன்று (18) நீதிமன்றத்தில் ஆஜராக முன்வாருங்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் அழைப்பு விடுத்துள்ளார்.
தீவக நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ள நயினாதீவு நாக பூசணி அம்மனின் சிலை தொடர்பிலான வழக்கு இன்றையதினம் நீதிமன்றத்தில் இடம்பெற உள்ள நிலையில் இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் ஒற்றுமையாக நீதிமன்றத்திற்கு சமூகம் அளியுங்கள் அதேபோல அனைத்து சட்டத்தரணிகளும் எமக்காக நீதிமன்றத்தில் ஆஜராக முன் வாருங்கள்எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.