இன்று இரவுடன் ஒரு முழு நாகரிகம் அழியும்! டொனால்ட் ட்ரம்பின் அதிரடிப் போர் முழக்கம் அணுகுண்டு பிரயோகம் மேற்கொள்ள போகின்றதா?
ஹோர்முஸ் நீரிணையைத் (Strait of Hormuz) திறக்குமாறு ஈரானுக்கு விதிக்கப்பட்ட கெடு இன்று இரவுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில்தான், “இன்று இரவு ஒரு முழு நாகரிகமும் அழியும், அதை மீண்டும் ஒருபோதும் மீட்க முடியாது” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
47 ஆண்டுகால மிரட்டல், ஊழல் மற்றும் மரணங்கள் இன்று இரவோடு முடிவுக்கு வரும் என அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்குள் ஹோர்முஸ் நீரிணையைத் திறக்காவிட்டால், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பொது உள்கட்டமைப்புகளை அணுவணுவாக அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
இவ்வாறான தாக்குதல்கள் போர்க்குற்றம் எனச் சர்வதேச அளவில் கவலைகள் எழுந்தபோதிலும், அதனை ஜனாதிபதியும் வெள்ளை மாளிகையும் முற்றாக நிராகரித்துள்ளன. ஈரானில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றமும், புதிய சிந்தனைகளும் ஒருவேளை இந்த அழிவைத் தடுத்து நிறுத்தலாம் என்ற எதிர்பார்ப்பும் ட்ரம்பின் பதிவில் தென்படுகிறது.
உலகின் நீண்ட மற்றும் சிக்கலான வரலாற்றின் மிக முக்கியமான தருணமாக இன்றைய இரவு பார்க்கப்படுகிறது.
ஒரு முழுமையான போரைத் தவிர்த்துவிட்டுப் புரட்சிகரமான அற்புதம் ஏதேனும் நிகழ்ந்து, ஈரான் இணங்கி வருமா என்பது இன்று நள்ளிரவுக்குள் தெரிந்துவிடும்.
அமெரிக்காவின் இந்த அதிரடி நகர்வால் வளைகுடாப் பகுதியில் போர் மேகங்கள் மிகத் தீவிரமாகச் சூழ்ந்துள்ளன. ஈரானின் மகத்தான மக்களுக்கு இறைவன் அருள் புரிவார் என ட்ரம்ப் தனது பதிவை முடித்துள்ளார்.
இந்நிலையில், அமெரிக்கா அணுகுண்டு பிரயோகம் மேற்கொள்ள போகின்றதா என்ற அச்ச நிலைமையும் ஏற்பட்டுள்ளது.




