அனலைதீவில் பரபரப்பு! – துப்புரவுப் பணியின் போது சிக்கிய ஆயுதங்கள்
யாழ்ப்பாணம், அனலைதீவு பகுதியில் உள்ள காணி ஒன்றினை அதன் உரிமையாளர் இன்று (07.04.2026) துப்புரவு செய்துள்ளார். இதன்போது மண்ணில் புதையுண்ட நிலையில் துருப்பிடித்த ஒரு கைக்குண்டு மற்றும் துப்பாக்கி ஒன்று இருப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
இது குறித்து உடனடியாக ஊர்காவற்றுறை பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், குறித்த ஆயுதங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
மீட்கப்பட்ட கைக்குண்டு மற்றும் துப்பாக்கி ஆகியவை நீண்ட காலமாக மண்ணில் புதையுண்டிருந்ததால் மிகவும் துருப்பிடித்த நிலையில் காணப்படுகின்றன.





